மக்களவைத் தேர்தலில் ராகுல் மீண்டும் வயநாட்டில் போட்டியிடுவார்: தாரிக் அன்வர் 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் போட்டியிடுவார் என அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் தெரிவித்தார். 

முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தாரிக் அன்வர் பேசும்போது, 

ராகுல் காந்தி வயநாட்டில் நிச்சயம் போட்டியிடுவார். வயநாடு மக்கள் மீது அவருக்கு அவ்வளவு பாசம் என்றார். 

காந்தி வட இந்தியாவில் இருந்து இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, நான் அப்படி நினைக்கவில்லை, ஆனால் கட்சியின் மூத்த தலைவராக இருப்பதால் அவர் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். 

ஏற்கனவே இரண்டு முறை மக்களவையில் ஆலப்புழாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் மீண்டும் போட்டியிடலாம் என்ற தகவல் குறித்த மற்றொரு கேள்விக்கு,

அவருக்கு அதிக ஆர்வம் இல்லை. 2019இல் கூட அவர் போட்டியிடவில்லை, அவர் கட்சிக்காக வேலை செய்வதால், இந்த முறை வித்தியாசமாக இருக்காது என்று அன்வர் கூறினார்.

கண்ணூர் தொகுதி எம்.பி.யும், மாநில கட்சித் தலைவருமான கே.சுதாகரன் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அன்ர் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com