பணி நேரம் முடிந்தது: நடுவழியில் ரயிலிலிருந்து இறங்கிய ஓட்டுநர்கள்!

நடுவழியில் நிறுத்தப்பட்ட இரண்டு விரைவு ரயில்களில் 2500 பயணிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
பணி நேரம் முடிந்தது: நடுவழியில் ரயிலிலிருந்து இறங்கிய ஓட்டுநர்கள்!


லக்னௌ: உத்தரப்பிரதே மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில், நடுவழியில் நிறுத்தப்பட்ட இரண்டு விரைவு ரயில்களில் 2500 பயணிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதன்கிழமை, ஒரு விரைவு ரயிலின் ஓட்டுநர், தனது பணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி இறங்கிச் சென்றுவிட்டதாகவும், மற்றொரு விரைவு ரயிலின் ஓட்டுநர் உடல்நிலை சரியில்லை என்று கூறிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால், குடிநீர், உணவு, மின்வசதி இல்லாமல், ரயில்களில் 2500 பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் ஏற்பட்ட கோபத்தில் அவர்கள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், உடனடியாக விரைந்து வந்து ரயில் பயணிகளை சமாதானம் செய்து, ரயிலில் ஏற்றி, அவற்றை சென்றுசேர வேண்டிய ரயில்நிலையங்களுக்குக் கொண்டு சேர்த்தனர். ஒவ்வொரு ரயிலும் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக ரயில் நிலையங்களை வந்தடைந்தன.

இவ்விரு விரைவு ரயில்களும் சிறப்பு ரயில்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறப்பு ரயில் என்று அதிகப் பணம் கட்டி அதில் ஏறிய பயணிகள் பலரும், எங்களது பயணம் ஓரிரு மணி நேரங்கள் அல்ல ஒரு நாள் அளவுக்கு தாமதமாகியிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com