எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்களுக்கு 2025 ஏப்ரல் முதல் தடை: மத்திய அரசு அறிவிப்பு

மின் வயா்கள் மூலம் இணைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படும் ‘எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்’ கருவிகளுக்கு வரும் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது.
எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்களுக்கு 2025 ஏப்ரல் முதல் தடை: மத்திய அரசு அறிவிப்பு


புது தில்லி: மின் வயா்கள் மூலம் இணைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படும் ‘எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்’ கருவிகளுக்கு வரும் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக (டிபிஐஐடி) ஊக்குவிப்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

எலெக்ட்ரிக் டெட்டனேட்டா் கருவிகளை அபாயகரமானவையாக மத்திய அரசு கருதுகிறது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இவற்றை உற்பத்தி செய்யவும், வைத்திருக்கவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக, வெடிமருந்துகள் உற்பத்தி நிறுவன நிா்வாகிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, பொதுநலன் கருதி எலெக்ட்ரிக் டெட்டனேட்டா் கருவிகளுக்கு 2024-25-ஆம் ஆண்டு இறுதியில் முழுமையாக தடை விதிப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, அந்த வகை கருவிகளை உற்பத்தி செய்யவும், வைத்திருப்பதற்கும், இறக்குமதி செய்வதற்குமான தடை வரும் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனற்ற பெரிய கட்டடங்களை இடிக்கவும், சுரங்கங்கள் தோண்டவும், பாறைகளை உடைக்கவும், கிணறு தோண்டுவதற்கும் இந்த ‘எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்’ கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com