மேகாலயா: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மோதல் பகுதியில் சிக்கித் தவித்த 27 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஆளும் ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 350-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 1,900-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாகவும், இரு தரப்பிலிருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
நீண்ட காலமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் - காஸா சண்டையில் இது மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள 18,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
As per the latest information and through the efforts of MEA and our Indian mission, our 27 citizens from Meghalaya, who were stuck in the war conflict zone of Israel and Palestine have safely crossed the border into Egypt@DrSJaishankar @MEAIndia
â Conrad K Sangma (@SangmaConrad) October 8, 2023
தேவையற்ற பயனத்தை தவிா்க்க வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த இந்தியர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாது:
சமீபத்திய தகவல்களின்படி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்தின் முயற்சியால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் மோதல் பகுதியில் சிக்கித் தவித்த மேகாலயாவைச் சேர்ந்த 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 27 பேரும் பாதுகாப்பாக எகிப்து எல்லையை கடந்துள்ளதாக முதல்வர் சங்மா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘என் குழந்தையிடம் பள்ளியை சுத்தம் செய்ய சொன்னாலும் தவறாக நினைக்க மாட்டேன்’... அமைச்சர் விஜய் தமிழன் பேச்சு!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சி பணி: காலியிடங்கள் 1,450

பாமக தலைவர் பதவி: வழக்கை திரும்ப பெற்றார் ராமதாஸ்!







