
ஜி-20 மாநாட்டையொட்டி சிகர் செல்ல ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பாபா ஸ்ரீ கின்வதாஸ் மகராஜின் நினைவு நாளையொட்டி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சாங்க்லியா பீடத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஜி-20 உச்சிமாநாட்டைக் கருத்தில் கொண்டு உதய்பூரில் இருந்து சிகருக்குச் செல்ல அவரின் ஹெலிகாப்டருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அவரின் சிகர் பயணம் இன்று ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சாங்க்லியா பீடத்தின் பீடாதீஸ்வர் ஸ்ரீ ஓம் தாஸ் மகராஜிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் அசோக் கெலாட் இதுகுறித்து தெரிவித்தார். இருப்பினும் விரைவில் சாங்க்லியா பீடத்திற்கு சென்று ஆசிர்வாதம் பெறுவேன்று என்று அவர் கூறியுள்ளார்.
ஜி-20 மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.9, 10) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா உள்பட 20 நாடுகளின் முக்கியத் தலைவா்கள் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக தலைநகா் தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.