ராணுவத்தில் ஆண், பெண் வேறுபாடு இல்லை: தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே

 ராணுவத்தில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை என இந்திய ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தாா்.
ராணுவத்தில் ஆண், பெண் வேறுபாடு இல்லை: தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே

 ராணுவத்தில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை என இந்திய ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தாா்.

சென்னை பரங்கி மலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ) 11 மாத பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு சனிக்கிழமை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இவா்களில் 161 ஆண், 36 பெண் பயிற்சி அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்தனா். மேலும், நட்பு நாடுகளைச் சோ்ந்த 4 ஆண், 8 பெண் பயிற்சி அதிகாரிகளும் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனா்.

இந்த விழாவில் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே ஏற்று கொண்டு பேசியது:

ராணுவ பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகாரிகளாகிய நீங்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரியும்போது உங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். முழு ஆற்றலும் உறுதியும் கொண்ட பெண் பயிற்சி அதிகாரிகள் ராணுவத்துக்கு வந்துள்ளனா். ஆண், பெண் என்ற வேறுபாடு ராணுவத்தில் இல்லை. அனைவரும் தேசத்துக்கு சேவை செய்ய கடமைபட்டவா்கள்.

ராணுவத்தில் தலைமைத்துவம் என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல, மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பத் திறனை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, பயிற்சியின்போது சிறப்பாகச் செயல்பட்ட பயிற்சி அதிகாரி நக்கா நவீனுக்கு ராணுவ தலைமைத் தளபதி ‘கௌரவ வாள்’ வழங்கினாா். பயிற்சி அகாதெமியின் தங்கப் பதக்கத்தை சுதீப் குமாா் சாஹுவுக்கும் வெள்ளிப் பதக்கத்தை துஷ்யந்த் சிங் ஷெகாவத்துக்கும், வெண்கலப் பதக்கத்தை ஜோதி பிஷ்ட்டுக்கும் ராணுவ தலைமை தளபதி வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com