வழக்கு விவரமறியாத வழக்குரைஞர் ஆஜரானதால் அபராதம்: என்ன நடந்தது?

உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விவரம் அறியாத இளம் வழக்குரைஞரை (ஜூனியா்) ஆஜா்படுத்தி வழக்கை ஒத்திவைக்கக் கோரிய வழக்குரைஞருக்கு ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விவரம் அறியாத இளம் வழக்குரைஞரை (ஜூனியா்) ஆஜா்படுத்தி வழக்கை ஒத்திவைக்கக் கோரிய வழக்குரைஞருக்கு ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அமா்வு வியாழக்கிழமை தனது விசாரணை நடைமுறைகளைத் தொடங்கியபோது, வழக்கு விசாரணைக்காக இளம் வழக்குரைஞா் ஒருவா் ஆஜரானாா். தனது மூத்த வழக்குரைஞா் ஆஜராக முடியாததால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிபதிகளிடம் அவா் கேட்டுக் கொண்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நீதிமன்றத்தை இப்படிச் சாதாரணமாக நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. நீதிமன்றத்தின் செயல்பாட்டில் செலவுகள் அடங்கியுள்ளன. வாதிடத் தொடங்குகள்’ என்றனா்.

கடைசி நிமிடத்தில், வழக்கு பற்றி எந்த தகவலும் தெரியாத, வழக்கு விவரங்கள் அடங்கிய பேப்பர்களை கையில் வைத்திருக்காமல் இளம் வழக்குரைஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, வழக்குப் பற்றிய ஒரு சிறு கேள்விக்குக் கூட பதிலளிக்க முடியாமல் நின்றது உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

எனினும், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட முன்வந்திருக்கும் இளம் வழக்குரைஞரின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில், இந்த வழக்கின் அடிப்படை விஷயங்களை எடுத்துக் கூறி, ஒத்திவைக்குமாறு வாதிடுமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், ஒரு சிறு வாதத்தைக்கூட வழக்குரைஞரால் முன்வைக்க முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கேட்ட சின்ன சின்ன கேள்விகளுக்குக் கூட அவரால் பதிலளிக்க முடியாமல் போனது. இப்படி, ஒரு வழக்கு தொடர்பான எந்த விவரமும் அறியாமல், அது பற்றிய விவரங்கள் எதுவும் கையில் இல்லாமல், நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் இப்படி வந்து நிற்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

ஆனால், இந்த வழக்கின் விவரங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது மற்றும் வாதிடுவதற்கான அறிவுறுத்தல்கள் தனக்கு வழங்கப்படவில்லை என அந்த இளம் வழக்குரைஞா் கூறினாா்.

இதையடுத்து, வழக்கின் விசாரணைக்காக பதிவு செய்யப்பட்ட மூத்த வழக்குரைஞா் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனா். காணொலி வாயிலாக ஆஜரான மூத்த வழக்குரைஞா், நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரினாா்.

வழக்கு தொடா்பாக எந்த ஆவணமுமின்றி, வழக்கைப் பற்றி விவரமறியாத இளம் வழக்குரைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதற்காக அவருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா். இதுபோன்ற செயல்கள் நீதிமன்றத்தின் மாண்புக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், அரசியல்சாசன அமர், எங்களுக்கு வழக்குகளை விசாரணை நடத்தத் தான் அறிவுறுத்தப்பட்டிருக்கிறதே தவிர, விசாரணையை ஒத்திவைக்க அல்ல என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com