
ஆப்பிள் ஐஃபோன் 15 ஸ்மார்ட்ஃபோன்களின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 15 மாடல் செப். 12 ஆம் தேதி சந்தையில் அறிமுகமானது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்ட்டது என்பதால் ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஃபோன் 15 சீரீஸில் ஐஃபோன் 15, ஐஃபோன் 15 பிளஸ், ஐஃபோன் 15 ப்ரோ, ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் உள்ளன.
இதில் நவீன டிஸ்பிளே, 48 மெகா பிக்சல் கேமரா, மறுசுழற்சி செய்யக்கூடிய நவீன பேட்டரிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கிராபிக்ஸ், மொபைல் கேமிங் ஆகியவற்றுக்கு சிறந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனங்களின் சார்ஜிங் போர்ட்டர்களுக்கு பதிலாக, ஐஃபோன் 15 மாடல்களில் டைப்-சி சார்ஜிங் போர்ட்டர் உள்ளது.
இதற்கான முன்பதிவு நேற்று(செப்.15) மாலை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் விலை
ஐஃபோன் 15 (128 ஜிபி): ரூ 79,900
ஐஃபோன் 15 (256 ஜிபி): ரூ 89,900
ஐஃபோன் 15 (512 ஜிபி): ரூ 1,09,900
ஐஃபோன் 15 பிளஸ் (128 ஜிபி): ரூ 89,900
ஐஃபோன் 15 பிளஸ் (256 ஜிபி): ரூ 99,900
ஐஃபோன் 15 பிளஸ் (512 ஜிபி): ரூ 1,19,900
ஐஃபோன் 15 ப்ரோ(128 ஜிபி): ரூ. 1,34,900
ஐஃபோன் 15 ப்ரோ (256 ஜிபி): ரூ.1,44,900
ஐஃபோன் 15 ப்ரோ (512 ஜிபி): ரூ. 1,64,900
ஐஃபோன் 15 ப்ரோ (1 டிபி): ரூ. 1,84,900
ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் (256 ஜிபி): ரூ 1,59,900
ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் (512 ஜிபி): ரூ 1,79,900
ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1 டிபி): ரூ. 1,99,900
இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தல்: செப். 23ல் முதல் கூட்டம் - ராம்நாத் கோவிந்த் தகவல்
எப்படி முன்பதிவு செய்வது?
ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டுமெனில் https://www.apple.com/in என்ற நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்தில் சென்று முன்பதிவு(pre-order) செய்யலாம்.
உங்கள் போன் மாடலை தேர்வு செய்தபின்னர் அதன் நிறத்தையும் எவ்வளவு ஸ்டோரேஜ் வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
நேரடியாக சென்று வாங்க விரும்புவோர் ஆப்பிள் தயாரிப்புகள் விற்கும் கடைகளுக்குச் சென்று முன்பதிவு செய்யலாம்.
டெலிவரி: செப். 22 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட ஐஃபோன் 15 ஸ்மார்ட்போன்கள் டெலிவரி செய்யப்படுகிறது.
ஆஃபர்கள் என்னென்ன?
ஆப்பிள் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு செய்யும்போது ஹெச்டிஎப்சி கார்டுகளை பயன்படுத்தினால் ஐஃபோன் 15 ப்ரோ, ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுக்கு ரூ. 6,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐஃபோன் 15, ஐஃபோன் 15 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 5,000 வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழைய ஐஃபோன்களைக் கொடுத்தும் புதியதை ஆர்டர் செய்யலாம்.
இதையும் படிக்க | நம்பிக்கையும் உண்மையும்: புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா? பரவக்கூடியதா?

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...