ஒடிசாவின் முதல் பெண் பேரவைத் தலைவர் ஆவாரா பிரமிளா மல்லிக்?

ஒடிசாவின் பேரவைத் தலைவர் பதவிக்கு அமைச்சர் பிரமிளா மல்லிக் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் முதல் பெண் பேரவைத் தலைவர் ஆவாரா பிரமிளா மல்லிக்?

ஒடிசாவின் பேரவைத் தலைவர் பதவிக்கு அமைச்சர் பிரமிளா மல்லிக் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருந்த பிரமிளா மல்லிக் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆறு முறை எம்எல்ஏவாக இருந்த மல்லிக் தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மல்லிக் ராஜினாமாவை தொடர்ந்து நவீன் பட்நாயக் அமைச்சரவையில் முதல்வர் உள்பட 20 அமைச்சர்கள் உள்ளனர்.

ஒடிசா சட்டப் பேரவையின் தலைவர் பதவிக்கு மல்லிக் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அமைச்சரவை மாற்றத்தில் நிதியமைச்சராக விக்ரம் கேசரி அருகா நியமிக்கப்பட்டதையடுத்து, ஒடிசா சட்டப்பேரவைத் தலைவர் பதவி காலியானது. 147 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆளும் பிஜேடிக்கு 113 எம்எல்ஏக்கள் இருப்பதால் ஓஎல்ஏவின் அடுத்த பேரவைத்தலைவர் பதவிக்கு மல்லிக் தயாராக உள்ளார் எனத் தெரிகிறது. எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 22 எம்எல்ஏக்கள் உள்ளனர். 9 எம்எல்ஏக்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்.

பேரவைத் தலைவருக்கான தேர்தல் செப்.22-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. அதேநேரத்தில் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அன்றைய தினம் தொடங்கி அக்.4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முன்னதாக, சபாநாயகர் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதியும், வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 18ஆம் தேதியும் நடைபெற இருந்தது. மேற்கு ஒடிசாவின் விவசாயத் திருவிழா செப்.21-ம் நிகழ்வதால், தேர்தலைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் அறிவித்ததையடுத்து, தேர்தல் செப்டம்பர் 22ஆம் தேதிக்கும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 21ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com