மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகரை நியமிக்க இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Published On :6 பிப்ரவரி 2024, 6:46 pm IST


புதுதில்லி: ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆதி சவை சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் தொடர்ந்த வழக்கில், ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இது குறித்து 3 வாரங்களுக்குள் தமிழ்நாடு இந்து அறநிலைத் துறை, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். 

அதில் தமிழ்நாட்டில் உள்ள ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம், பயிற்சி உள்ளிட்டவைக்கு சேஷம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள்  வழக்குகளில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி அரசு செயல்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து  ஆகம கோயில்களில் கட்டாயமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியே அர்ச்சகர்கள் நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம்.எம்.சந்ரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு  இன்று விசாரித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.