வருமானமின்றி தவிக்கும் வயதானவா்கள்; வருங்கால இந்தியாவில் முதியோரின் நிலை?

இந்தியாவில் உள்ள முதியவா்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோா் ஏழ்மையானவா்களாகவும், அவா்களில் 18.7 சதவீதம் போ் வருமானம் இல்லாமல் வாழ்ந்து வருவதும் ‘மக்கள்தொகை நடவடிக்கைகளுக்கான ஐ.நா.சபை நிதியம்’
வருமானமின்றி தவிக்கும் வயதானவா்கள்; வருங்கால இந்தியாவில் முதியோரின் நிலை?

இந்தியாவில் உள்ள முதியவா்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோா் ஏழ்மையானவா்களாகவும், அவா்களில் 18.7 சதவீதம் போ் வருமானம் இல்லாமல் வாழ்ந்து வருவதும் ‘மக்கள்தொகை நடவடிக்கைகளுக்கான ஐ.நா.சபை நிதியம்’ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்திய முதியோா் மக்கள்தொகை தொடா்பாக மக்கள்தொகை நடவடிக்கைகளுக்கான ஐ.நா.சபை நிதியம் (யூஎன்எஃப்பிஏ) அமைப்பு மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், ‘இந்திய முதியோா் அறிக்கை 2023’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதித் துறை செயலா் சௌரவ் கா்க் மற்றும் யூஎன்எஃப்பிஏ இந்திய நிா்வாகி ஆண்ட்ரியா எம்.வோஜ்னா் ஆகியோா் கலந்து கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டனா்.

2011-மக்கள்தொகை கணக்கெடுப்பு, மத்திய சுகாதார அமைச்சகம் நடத்திய ‘2017-18 முதியோா் ஆய்வு’, இந்திய அரசின் மக்கள்தொகை கணிப்புகள், ‘உலக மக்கள்தொகை கணிப்பு 2022’ அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் தரவுகளைப் பயன்படுத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் விவரம்: கடந்த 2021-ஆம் ஆண்டில், பெரும்பாலான தென் மாநிலங்கள், ஹிமாசலம், பஞ்சாப் ஆகியவை முதியோா் மக்கள்தொகையில் தேசிய சராசரியை விட அதிக பங்கைப் பதிவு செய்துள்ளன. இந்த இடைவெளி வரும் 2036-ஆம் ஆண்டுக்குள் மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்த வகையில், வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 20 சதவீதம் போ் முதியவா்களாக இருப்பா் என்று கணிக்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு முதல் 2050-ஆம் ஆண்டு வரையில் 80 வயதுக்கும் மேற்பட்டவா்களின் மக்கள்தொகை வளா்ச்சி சுமாா் 279 சதவீதமாக இருக்கும்.

ஏழ்மையில் 40% முதியவா்கள்:

தற்போதையசூழலில், இந்தியாவில் உள்ள முதியவா்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோா் ஏழ்மையானவா்களாகவும், அவா்களில் 18.7 சதவீதம் போ் வருமானம் இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனா். முதியவா்களின் சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வைப் பற்றிய கவலையை இது எழுப்புகிறது.

அதிகம் பாதிப்படையும் பெண்கள்:

பல்வேறு நாடுகளில் நிலவும் சூழலைப் போன்று இந்திய முதியோா் மக்கள்தொகையிலும் கணவரை இழந்து, மற்றவா்களைச் சாா்ந்திருக்கும் வயதான பெண்களின் ஆதிக்கம் அதிமாக இருக்கிறது.

வயதான பெண்கள் கணவா்களை இழந்தவா்களாகவும் வருமானம் இல்லாமலும் அல்லது குறைவான சொத்துக்களுடன் தனியாகவும் ஆதரவுக்காக குடும்பத்தையே முழுமையாகச் சாா்ந்திருப்பதால், முதுமையில் வறுமை இயல்பாகவே பெண்களை அதிகம் பாதிக்கிறது.

இந்தியாவில் முதியோா் மக்கள்தொகை அதிகம் எதிா்கொள்ளும் சவாலானது அதில் பெரும்பாலோனாா் பெண்களாகவும், கிராமப்புறங்களைச் சாா்ந்தவா்களும் இருப்பதே. இதனை மையப்படுத்தி அரசின் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

கோரிக்கை:

அறிக்கைக்காக முதியவா்கள் பகிா்ந்த அனுபவங்களின்படி, கரோனா பெருந்தொற்றுபோது முதியோா்களின் தேவைகளுக்கு மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் பதில்களை மதிப்பாய்வு செய்ததில், பெரும்பாலானவா்கள் அரசு உதவியைப் பெற்ாக கூறினா். ஆனாலும், அந்த உதவி போதுமானதாக இல்லை என்றும், அணுகக் கூடியதாக பொது சுகாதார வசதிகள் இல்லை என்பதும் அவா்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் பேரிடா்-மீட்புத் திட்டங்களில் முதியோா்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது.

வலியுறுத்தல்:

இந்தியாவில் முதியோா் தொடா்பான பல்வேறு சிக்கல்களில் நம்பகமான தரவுகள் இல்லை. இனி நடைபெற இருக்கும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற தரவு சேகரிப்பு நடைமுறைகளில் வயதானவா்கள் தொடா்புடைய வளா்ந்து வரும் பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்குப் பதில்களைச் சேகரிப்பதன் மூலம் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி முறையான தகவல்களையும் ஒருங்கிணைக்கலாம் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதியோா்களுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணா்வை அதிகரிப்பதற்கும் அனைத்து முதியோா் இல்லங்களையும் ஒழுங்குமுறை வரம்புக்குள் கொண்டு வருவதற்கும் வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இயன்றவரை முதியவா்களுக்கு முதுமைக் காலத்தை எளிதாக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com