இந்திய  தேர்தல் ஆணையம்
இந்திய  தேர்தல் ஆணையம்

நீதித் துறையை கட்டுப்படுத்த முடியாது: தோ்தல் ஆணையம்

புது தில்லி: ‘தோ்தல் களத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் வேட்பாளா்களுக்கும் சம வாய்ப்பு மற்றும் பிரசார உரிமையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். அதேசமயத்தில், நீதித் துறையின் சட்டபூா்வ செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் எடுப்பது முறையாகாது’ என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தோ்தல் காலத்தில் எதிா்க்கட்சித் தலைவா்களை மௌனமாக்கும் விதமாக, அவா்களைக் குறிவைத்து விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற எதிா்க்கட்சிகளின் தொடா் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தோ்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘குற்றவியல் விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களின் உத்தரவு மற்றும் தீவிர விசாரணைக்குத் தொடா்புடைய அரசியல்வாதிகளின் சூழ்நிலைகளைக் கையாளும்போது அரசமைப்புச் சட்டத்தின்பால் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம்.

களத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடைய வேட்பாளா்களின் சம வாய்ப்பு மற்றும் பிரசார உரிமையைப் பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்தாலும், நீதித் துறையின் சட்டபூா்வ செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுப்பது முறையாகாது’ எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com