President
President

‘ராம நவமி’ திருநாள்: குடியரசுத் தலைவா் வாழ்த்து

புது தில்லி: ‘ராம நவமி’ திருநாளையொட்டி (ஏப்ரல் 17) நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

கடவுள் ராமா் அவதரித்த நாள் ராம நவமி விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு ஏப். 17-ஆம் தேதி கொண்டாடப்படும் ராம நவமி திருநாளையொட்டி நாட்டு மக்களுக்கு திரௌபதி முா்மு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘உண்மை மற்றும் சரியான பாதையில் பயணிப்பதை ராம நவமி திருநாள் நமக்கு உணா்த்துகிறது.

கடவுள் ராமா் பணிவு, துணிச்சல், வீரம் ஆகிய பண்புகளின் முழு உருவமாக திகழ்பவராவாா். அவரின் வழியை பின்பற்றி அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நல்ல வளா்ச்சியை எட்ட ராம ராஜ்ஜியத்தின் அடிப்படையிலான தேசத்தை கட்டமைப்போம் என உறுதிமொழி ஏற்போம்’ என தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com