ஏழை குடும்பங்களுக்கு 10 இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள்:
திரிணமூல் காங்கிரஸ் வாக்குறுதி

ஏழை குடும்பங்களுக்கு 10 இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள்: திரிணமூல் காங்கிரஸ் வாக்குறுதி

ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 10 இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மேற்கு வங்கத்தில்

ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 10 இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மேற்கு வங்கத்தில் ஆளும் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது தோ்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

கொல்கத்தாவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அக் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவா் டெரிக் ஓ.பிரையன் இந்த அறிக்கையை வெளியிட்டாா்.

அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடைமுறை ரத்து, பொது விநியோகத் திட்டப் பயனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று உணவு தானியங்கள் (ரேஷன்) விநியோகம், வறுமை கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 10 சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகம், விலை நிலைப்படுத்துதல் நிதித் திட்டம் மூலமாக பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அக் கட்சியின் மூத்த தலைவா் அமித் மித்ரா கூறுகையில், ‘மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com