வறுமையை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட முடியும்? -இது ராகுலின் உத்தரவாதம்

வறுமையை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட முடியும்? -இது ராகுலின் உத்தரவாதம்
படம் | பிடிஐ

மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இத்திட்டம் குறித்து ராகுல் காந்தி பேசியதாவது: ”வறுமையை ஒரேயடியாக ஒழித்துவிட முடியுமென ஒருவர் கூட சொல்வதில்லை. ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ’வறுமை ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும்’ என்ற இலக்கை அடைவதற்கான தீவிர நடவடிக்கைகளை நிச்சயமாக எடுக்கும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வந்துசேருவது உறுதி. இதை காங்கிரஸ் உறுதிசெய்யும்” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

முன்னதாக, ஞாயிறன்று(ஏப். 14) நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ’வறுமையை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட முடியும்’ என்ற உத்தரவாதத்தை அளித்திருந்த ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

“வறுமையை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட முடியும்’ என்ற அறிவிப்பின் மூலம், காங்கிரஸின் இளவரசர்(ராகுல் காந்தி) ஒட்டுமொத்த தேசத்தையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவர் மேஜிக் நிகழ்த்தும் பெரும் வித்தைக்காரர் தான்” என்று பிரதமர் மோடி ராகுலை விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக ராகுல் காந்தி இன்று(ஏப். 17) பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com