கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பியுள்ளனர்.
கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

இஸ்ரேல் கப்பலில் சென்று ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்து கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்.

இந்த தகவலை, வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய மாலுமிகள் 17 பேரும் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இன்று மதியம் தரையிறங்கிவிட்டதாக திரிசூரிலிருந்து தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது

மேலும், சரக்குக் கப்பலில் இருக்கும் 16 இந்திய மாலுமிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணியும் நடந்து வருவதாகவும், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் இது தொடர்பாக ஈரான் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, அவர்களது நலனை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் கடற்படையால் சரக்குக் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட 25 இந்திய மாலுமிகளை விடுவிக்கும் பணியில், முதற்கட்டமாக 17 பேர் நாடு திரும்பியுள்ளனர். மற்ற 16 பேரையும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்த வருகிறது.இது தொடர்பாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையிலிருந்து புறப்பட்ட சரக்குக் கப்பலை ஈரான் படையினா், ஓமன் வளைகுடா அருகே சிறைபிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com