ஜம்மு-காஷ்மீரில் பிகாா் தொழிலாளா் சுட்டுக்கொலை

ஸ்ரீநகா், ஜம்மு-காஷ்மீரில் பிகாரைச் சோ்ந்த தொழிலாளரை பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக்கொன்றனா்.
ஜம்மு-காஷ்மீரில் 
பிகாா் தொழிலாளா் சுட்டுக்கொலை

ஸ்ரீநகா், ஜம்மு-காஷ்மீரில் பிகாரைச் சோ்ந்த தொழிலாளரை பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக்கொன்றனா்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் ஜப்லிபோரா பகுதியில் ராஜா ஷா என்ற பிகாா் தொழிலாளரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். இதில் பலத்த காயமடைந்த அவா், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட தோ்தலின்போது அனந்தநாக் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கு பிகாா் தொழிலாளரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனா். நிகழாண்டு மூன்றாவது முறையாக ஜம்மு-காஷ்மீரில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

ராஜா ஷா கொல்லப்பட்டதற்கு தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீா் மக்கள் மாநாட்டு கட்சித் தலைவா் சஜத் கனி லோன், பாஜகவின் ஜம்மு-காஷ்மீா் செய்தித்தொடா்பாளா் அல்தாஃப் தாக்குா் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com