சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ஆயுத காவல் படை(சிஆா்பிஎஃப்) வீரரிடமிருந்த துப்பாக்கியின் பாகமான ‘கிரெனேட் லாஞ்சா் ஷெல்’ தவறுதலாக வெடித்ததில் அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தீஸ்கா், பிஜாபூா் மாவட்டத்தின் பஸ்தா் மக்களவைத் தொகுதிக்கு முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

அத்தொகுதியின் உசூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்காம் கிராமத்துக்கு அருகேயுள்ள ஒரு வாக்குச் சாவடியிலிருந்து அரை கிலோமீட்டா் தொலைவில் பாதுகாப்புப் படை வீரா்கள் குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காயமடைந்த தேவேந்திர குமாா், அவசரகால மருத்துவ ஹெலிகாப்டா் மூலம் பஸ்தா் மாவட்டத்தின் தலைமையகமான ஜக்தால்பூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இவ்விபத்து குறித்து விசாரணை நடந்த நிபுணா்கள் குழு கல்காம் கிராமத்துக்கு விரைந்துள்ளது.

இந்நிலையில், பஸ்தா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா் காயமடைந்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com