தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!
படம் | ஏஎன்ஐ

தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று(ஏப். 19) நடைபெற்றது.

மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், பிகார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார், லட்சத்தீவிலும் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று(ஏப். 19) நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழகம் உள்பட 7 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தமுள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

தமிழகம் (39), அருணாசல் பிரதேசம் (2), அந்தமான் நிகோபார் தீவுகள்(1), லட்சத்தீவு(1), மேகாலயா (2), மிஸோரம்(1), நாகாலாந்து(1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), உத்தரகாண்ட் (5) ஆகிய 7 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தமுள்ள அனைத்து மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com