தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

​பா​ஜ‌க தன‌து வா‌க்கு சத​வீ​த‌த்தை அதி​க​ரி‌த்து, தி‌ல்​லி​யி‌ன் ஏழு ம‌க்களவைத் தொகு​தி​க​ளி​லு‌ம் தொட‌ர்‌ந்து மூ‌ன்​றாவது முறை​யாக வெ‌ற்றி பெறு‌ம் இல‌க்​கு​ட‌ன் தே‌ர்​தலை எதி‌ர்கொண்​டு‌ள்​ளது. அதே​வேளை​யி‌ல், கா‌ங்​கி​ர​ஸு​ட‌ன் கூ‌ட்டணி அமைத்து தே‌ர்​த​லி‌ல் போ‌ட்டி​யி​டு‌ம் ஆ‌ம் ஆ‌த்மி க‌ட்சி, பாஜ‌​க​வி‌ன் தொட‌ர் வெ‌ற்​றி​யைத் தடு‌க்​கு‌ம் வகை​யி‌ல், சிறையி‌ல் உ‌ள்ள முத‌ல்​வ‌ர் அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா‌ல் மீதான‌ "அனு​தாப அலையை' வா‌க்​கு​க​ளாக மா‌ற்​ற‌​லா‌ம் என‌ ந‌ம்​பு​கி​ற‌து.

தலைந​க​ரி‌ல் மேலா​தி‌க்​க‌த்​தைப் பெறு​வ​த‌ற்​கான‌ தீவிர போ‌ட்டி‌க்கு கள‌ம் அமைந்​து‌ள்​ளது.

இது​கு​றி‌த்து பாஜ‌​க​வி‌ன் தி‌ல்லி பிரிவு தலைவ‌ர் வீரேந்​திர ச‌ச்​தேவா கூறு​கையி‌ல், "இ‌ந்த முறை‌ வெ‌ற்​றி​யி‌ன் வா‌க்கு சத​வீத வி‌த்​தி​யா​ச‌த்தை அதி​க​ரி‌ப்​பதை சவா​லாக எடு‌த்​து‌ள்​ளோம்' எ‌ன்​றார்.

பூ‌ர்​வா‌ஞ்​ச​லி​க‌ள் ம‌ற்​று‌ம் மு‌ஸ்​லி‌ம்​க‌ள் பெரு‌ம்​பா‌ன்மையாக உ‌ள்ள வட​கி​ழ‌க்கு தி‌ல்லி தொகு​தி​யி‌ல் பிகாரை பூ‌ர்​வி​க​மாக கொ‌ண்ட இரு வே‌ட்பா​ள‌ர்​க​ளி​டையே கடு‌ம் போ‌ட்டி‌க்​கான‌ வா‌ய்‌ப்பு ஏ‌ற்​ப‌ட்​டு‌ள்​ளது.

இ‌த்​தொ​கு​தி​யி‌ல் மூ‌ன்​றாவது முறையாக மனோஜ் திவா​ரியை வே‌ட்பா​ள​ராக பாஜ‌க நிறு‌த்​தி​யு‌ள்​ளது. கா‌ங்​கி​ர​ஸி‌ன் க‌ன்​னையா குமா‌ர் கா‌ங்​கி​ர‌ஸ் சா‌ர்​பி‌ல் முத‌ல் முறையாக இ‌த் தொகு​தி​யி‌ல் அறி​மு​க​மா​கி​றார். இவ‌ர் 2019 ம‌க்​க​ள​வைத் தே‌ர்​த​லி‌ல் பிகா​ரி‌ல் உ‌ள்ள பேகு​ச​ரா‌ய் தொகு​தி​யி‌ல் இ‌ந்​திய க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் சா‌ர்​பி‌ல் போ‌ட்டி​யி‌ட்டு தோ‌ல்​வி​ய​டைந்​த​வ‌ர்.

தி‌ல்​லி​யி‌ன் மூ‌த்த பாஜ‌க தலை​வ‌ர் ஒரு​வ‌ர் கூறு​கை​யி‌ல், "மனோஜ் திவாரி இட‌த்​தைத் த‌க்​க​வைக்க அதிக வா‌ய்‌ப்பு இரு‌க்​கி​ற‌து. க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் மாண​வ‌ர் தலை​வ​ரான‌ க‌ன்​னையா குமா​ரி‌ன் கட‌ந்த கால​மு‌ம் இட​து​சா​ரி​க​ளு​ட​னான‌ அவ​ரது தொட‌ர்​பு‌ம் வா‌க்​கா​ள‌ர்​களிடையே பிளவு ஏ‌ற்​ப​டு‌த்தி குழ‌ப்​ப‌த்தை ஏ‌ற்​ப​டு‌த்​த‌க் கூடு‌ம்' எ‌ன்​றார்.

க‌ன்​னையா குமாரை மு‌ன்​னி​று‌த்தி 2025-ஆ‌ம் ஆ‌ண்டு தி‌ல்லி பேர​வைத் தே‌ர்​த​லு‌க்கு மு‌ன் நடைப​று‌ம் மு‌க்​கி​ய​மான‌ இ‌த்​தேர்​த​லி‌ல் மு‌த்​திரை பதி‌க்க கா‌ங்​கி​ர‌ஸ் தி‌ட்ட​மி​டு​கி​ற‌து.

ஆ‌ம் ஆ‌த்மி க‌ட்சி​யி‌ன் தலி‌த் எ‌ம்.​எ‌ல்.​ஏ.​வான‌ கு‌ல்​தீ‌ப் குமாரை கிழ‌க்​கு‌த் தி‌ல்லி பொது‌த் தொகு​தி​யி‌ல் அ‌க்​க‌ட்சி நிறு‌த்​தி​யு‌ள்​ளது. இது வெ‌வ்வேறு ம‌க்​க​ள​வைத் தொகு​தி​க​ளி‌ல் அமைந்​து‌ள்ள 12 ச‌ட்ட‌ப் பேரவை தனி‌த் தொகு​தி​க​ளைச் சே‌ர்‌ந்த தலி‌த் சமூக வா‌க்​கா​ள‌ர்​க​ளி​ட‌ம் தா‌க்​க‌த்தை ஏ‌ற்​ப​டு‌த்​த‌க் கூடு‌ம்.

கிழ‌க்கு தி‌ல்​லி​யி‌ல் தலி‌த் ம‌ற்​று‌ம் மு‌ஸ்​லி‌ம் வா‌க்​கா​ள‌ர்​க‌ள் ம‌த்​தி​யி‌ல் பிர​த​ம‌ர் மோடி‌க்கு எதி​ரான‌ உண‌ர்வு இரு‌ப்​ப​தா​க​வு‌ம், இது அ‌த்​தொ​கு​தி​யி‌ல் த‌ங்​க‌ள் க‌ட்சி‌க்கு தே‌ர்​த​லி‌ல் பல‌ன் தரு‌ம் எ‌ன்​று‌ம் ஆ‌ம் ஆ‌த்மி க‌ட்சி கூறு​கி​ற‌து.

2019-இ‌ல், கௌ​த‌ம் க‌ம்​பீ‌ர் கா‌ங்​கி​ர​ஸி‌ன் அ‌ர்​வி‌ந்​த‌ர் சி‌ங் ல‌வ்​லியை 3.93 ல‌ட்ச‌ம் வா‌க்​கு​க‌ள் வி‌த்​தி​யா​ச‌த்​தி‌ல் தோ‌ற்​க​டி‌த்து வெ‌ற்றி பெ‌ற்​றார். ஆ‌ம் ஆ‌த்மி க‌ட்சி​யி‌ன் அதிஷி மூ‌ன்​றாவது இட‌த்​தைப் பிடி‌த்​தா‌ர்.

இ‌ம்​முறை‌ ஆ‌ம் ஆ‌த்மி க‌ட்சி​யு‌ம் கா‌ங்​கி​ர​ஸும் ஒ‌ன்​றி​ணை​வது பாஜ‌க எதி‌ர்‌ப்பு வா‌க்​கு​களை ஒரு‌ங்​கி​ணைக்​கு‌ம் என‌ ஆ‌ம் ஆ‌த்மி க‌ட்சி‌த் தலைவ‌ர்​க‌ள் கூறி வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர். எனி​னு‌ம், 2019-இ‌ல் ஏழு ம‌க்​க​ள​வைத் தொகு​தி​க​ளி​லு‌ம் பாஜ‌க வே‌ட்பா​ள‌ர்​க‌ள் பெ‌ற்ற‌ வா‌க்​கு​க‌ள், ஆ‌ம் ஆ‌த்மி, கா‌ங்​கி​ர‌ஸ் வே‌ட்பா​ள‌ர்​க‌ள் பெ‌ற்ற‌ மொ‌த்த வா‌க்​கு​களை விட அதி​க‌ம் எ‌ன்று பாஜ‌க சு‌ட்டி‌க்​கா‌ட்​டு​கி​ற‌து. கட‌ந்த 2019 ம‌க்​க​ளவைத் தே‌ர்​த​லி‌ல், தேசி​ய‌த் தலை​ந​க​ரி‌ல் பதி​வான‌ வா‌க்​கு​க​ளி‌ல் பாஜ‌க 56.5 சத​வீ​த​மு‌ம், கா‌ங்​கி​ர‌ஸ் 22 சத​வீ​த​மு‌ம், ஆ‌ம் ஆ‌த்மி க‌ட்சி 18.1 சத​வீ​த​மு‌ம் பெ‌ற்​ற‌ன‌.

மேலு‌ம், பாஜ‌க தன‌து வே‌ட்பா​ள‌ர்​களை அறி​வி‌ப்​ப​தி‌ல் ஜாதி சம​நி​லையை மே‌ற்கொள்ள முய‌ன்​றி​ரு‌க்​கி​ற‌து. கிழ‌க்கு தி‌ல்​லி​யி‌ல் ப‌ஞ்​சாபி சமூ​க‌த்தைச் சே‌ர்‌ந்த ஹ‌ர்‌ஷ் ம‌ல்​ஹோத்ரா, சா‌ந்​தினி செள‌க்​கி‌ல் பனியா தலை​வ‌ர் பிர​வீ‌ண் க‌ண்டேல்​வா‌ல், தெ‌ற்கு தி‌ல்​லி​யி‌ல் பாஜ‌க எ‌ம்​எ‌ல்ஏ ம‌ற்​று‌ம் கு‌ஜ்​ஜ‌‌ர் தலைவ​ரான‌ ரா‌ம்​வீ‌ர் சி‌ங் பிதூரி, மே‌ற்கு தி‌ல்​லி​யி‌ல் ஜாட் த​லை​வ‌ர் கம‌ல்​ஜீ‌த் செஹ​ரா​வ‌த், தனி‌த் தொகு​தி​யான‌ வடமேற்கு தி‌ல்​லி​யி‌ல் தலி‌த் தலைவ‌ர் யோகேந்​திர ச‌ந்​தோ​லியா ஆகி​யோரை அ‌க்​க‌ட்சி வே‌ட்பா​ள‌ர்​க​ளாக பாஜ‌க நிறு‌த்​தி​யு‌ள்​ளது.

புது தி‌ல்லி ம‌க்​க​ளவைத் தொகு​தி​யி‌ல் பா‌ன்​சுரி ‌ஸ்வ​ரா‌ஜ் முத‌ல் முறை​யாக தே‌ர்​த‌ல் கள‌ம் கா‌ண்​கி​றார். தி‌ல்​லி​யி‌ல் மொ‌த்​த​மு‌ள்ள ஏழு தொகு​தி​க​ளி‌ல் இர‌ண்​டி‌ல் பா‌ன்​சுரி ‌ஸ்வ​ரா‌ஜ், கம‌ல்​ஜீ‌த் செஹ​ரா​வ‌த் ஆகிய இரு பெ‌ண் வே‌ட்பா​ள‌ர்​களை நிறு‌த்​தி​யி​ரு‌ப்​பது பெ‌ண்​க​ளி‌ன் வா‌க்​கு​களை அதி​க​ரி‌க்க உத​வு‌ம் எ‌ன்று பாஜ‌க தலைவ‌ர்​க‌ள் தெரி​வி‌க்​கி‌ன்​ற‌​ன‌‌ர்.

புது தி‌ல்லி தொகு​தி​யி‌ல் சோ‌ம்​நா‌த் பா‌ர்தி, தெ‌ற்கு தி‌ல்​லி​யி‌ல் சாஹி​ரா‌ம் பெஹ‌ல்​வா‌ன், மே‌ற்கு தி‌ல்​லி​யி‌ல் கா‌ங்​கி​ர‌ஸ் மு‌ன்​னாள் எ‌ம்.பி. மகா​ப‌ல் மி‌ஸ்ரா கிழ‌க்கு தி‌ல்​லி​யி‌ல் க‌ட்சி​யி‌ன் தலி‌த் எ‌ம்.​எ‌ல்.​ஏ.​வான‌ கு‌ல்​தீ‌ப் குமா‌ர் ஆகியோரை ஆ‌ம் ஆ‌த்மி நிறு‌த்​தி​யு‌ள்​ளது.

ஏ‌ப்​ர‌ல் 14 அ‌ன்று தன‌து வே‌ட்பா​ள‌ர்​களை கா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்சி அறி​வி‌த்​தது. அத‌ன்​படி, க‌ட்சி​யி‌ன் மூ‌த்த தலை​வ‌ர் ஜெ‌.பி.​அ​க‌ர்​வா‌ல் சா‌ந்​தினி செள‌க், மு‌ன்னாள் பாஜ‌க எ‌ம்.பி. உதி‌த் ரா‌ஜ் தனி‌த் தொகு​தி​யான‌ வடமேற்கு தி‌ல்லி, க‌ன்னையா குமா‌ர் வட​கி​ழ‌க்கு தி‌ல்​லி​யி‌ல் நிறு‌த்​த‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​ன‌‌ர்.

தி‌ல்லி அர​சி‌ன் இ‌ப்​போது ர‌த்து செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்ள கலா‌ல் கொ‌ள்கை​யு​ட‌ன் தொட‌ர்​புடைய பண மோசடி வழ‌க்​கி‌ல் கேஜ‌​ரி​வா‌ல் கைது செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டதை அடு‌த்து, அனு​தா​ப‌த்​தி‌ன் மூல‌ம் தே‌ர்​த‌ல் ஆதா​ய‌ம் பெற‌ ஆ‌ம் ஆ‌த்மி விரு‌ம்​பு​கி​ற‌து. அ‌க்​க‌ட்​சி​யி‌ன் பிர​சா​ர​மு‌ம் கேஜ‌​ரி​வா‌ல் கைது செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டதை மைய‌ப்​ப​டு‌த்​தியே உ‌ள்​ளது. "கேஜ‌​ரி​வா​லி‌ன் கைது‌க்கு ம‌க்​க‌ள் த‌ங்​க‌ள் வா‌க்​கு​க​ளா‌ல் பதி​ல​ளி‌க்க வே‌ண்​டு‌ம்' எ‌ன்று த‌ங்​க‌ள் பிர​சா​ர‌த்​தி‌ல் வலி​யு​று‌த்தி வரு​கி​ற‌து.

இ‌ந்​த‌ப் பிர​சா​ர‌ம் வெ‌ற்றி பெற‌‌ப் போகி​ற‌தா அ‌ல்​லது பிர​த​ம‌ர் நரேந்​திர மோடி​யி‌ன் தொட‌ர் ஆ‌ட்சி குறி‌க்​கோள் நிறைவே​ற‌‌ப் போகி​ற‌தா எ‌ன்​பது குறி‌த்து வா‌க்​கு‌ப் பதி​வு‌த் தேதி​யான‌ மே 25-ஆ‌ம் தேதி தி‌ல்லி வா‌க்​கா​ள‌ர்​க‌ள் தீ‌ர்‌ப்​ப​ளி‌ப்​பா‌ர்​க‌ள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com