102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை சதவிகிதம் வாக்குப் பதிவாகியுள்ளது?
வாக்களித்துவிட்டு புன்னகையுடன் வெளியேறிய இளம் வாக்காளர்
வாக்களித்துவிட்டு புன்னகையுடன் வெளியேறிய இளம் வாக்காளர்படம் | ஏஎன்ஐ

தமிழகம் உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 102 மக்களவை தொகுதிகளிலும் இன்று (ஏப். 19) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

சிக்கிம், அருணாசல் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் 92 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று(ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெற்றது.

அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று(ஏப். 19) நடைபெற்றது.

மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், பிகார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும், அந்தமான் நிகோபார், லட்சத்தீவிலும் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று(ஏப். 19) நடைபெற்றது.

இன்று இரவு 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக திரிபுராவில் 79.90 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் 77.57 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் 73.25 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தர பிரதேசம் 57.61%, உத்தரகாண்ட் 53.64%, ராஜஸ்தான் 50.95%, மத்திய பிரதேசம் 63.33%, மகாராஷ்டிரம் 55.29%, பிகார் 47.49%, சத்தீஸ்கர் 63.41%, ஜம்மு காஷ்மீர் 65.08%, அருணாசல் பிரதேசம் 65.46%, அந்தமான் நிகோபார் 56.87%, அஸ்ஸாம் 71.38%, லட்சத்தீவு 59.02%, மணிப்பூர் 68.62%, மேகாலயா 70.26%, மிஸோரம் 54.18%, நாகாலாந்து 56.77%, சிக்கிம் 68.06% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com