தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

பாஜக ஆட்சியமைந்தால் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன்
தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
படம் | ஏஎன்ஐ

உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானதாகக் கருதப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம், பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தால் மீண்டும் கொண்டு வரப்படும் என்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அகமதாபாத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத் தன்மை நிறைந்தவை. கருப்பு பணத்தை ஒழித்துக்கட்டவும், அனைஅவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதத்தில், மறுசீரமைப்பு செய்து மீண்டும் கொண்டுவரப்படும்.

தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ள மனு தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com