கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

இடுபுலுபாயாவில் உள்ள தனது தந்தை ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்திற்குச் சென்று வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார்.
கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவரும், கட்சியின் வேட்பாளருமான ஒய்.எஸ்.சர்மிளா கடப்பா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் அவரது கட்சியான ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸில் இணைத்தார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு இடுபுலுபாயாவில் உள்ள தனது தந்தை ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்திற்குச் சென்று வேட்புமனுவை வைத்து ஆசி பெற்ற சர்மிளா சாலை பேரணியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கடப்பா மக்களவை தொகுதியில் சர்மிளா ஆளும் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் வேட்பாளரும், உறவினருமான ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கடப்பா தொகுதியில் மே 13-ம் தேதி நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடப்பா தொகுதியில் பத்வேல், கடப்பா, புலிவெந்தலா, கமலாபுரம், ஜம்மலமடுகு, புரோட்டத்தூர் மற்றும் மைடுகூர் ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com