நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

புதுதில்லி: நாடு முழுவதும் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து உள்ளது. அதேபோல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தில்லி, வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசாவிலும் கடும் வெயில் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அனந்தபூரில் 43.5 டிகிரி செல்சியஸாகவும், ஆந்திராவின் கர்னூலில் 43.2 டிகிரி செல்சியஸாகவும், சேலத்தில் 42.3 டிகிரி செல்சியஸாகவும், ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஏப்ரல் 15 முதல் ஒடிசாவிலும், ஏப்ரல் 17 முதல் மேற்கு வங்கத்திலும் வெப்ப அலை நிலவி வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு வங்காளம், கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, பீகார், சிக்கிம், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலையானது கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25 முதல் 27 தேதிகளில் ஒடிசாவில் இரவு நேர வெப்பநிலையானது இயல்பை விட அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது. அதிக இரவு வெப்பநிலையானது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் உடல் குளிர்ச்சியடைய வாய்ப்பு கிடைக்காது.

கடலோர ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கோவா, கேரளா, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அதிக ஈரப்பதம் இருப்பதால் மக்களின் சிரமம் மேலும் அதிகரிக்கும்.

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையானது 4 முதல் 8 நாட்கள் வரை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் சராசரியாக 4 முதல் 8 நாட்கள் வரையிலான வெப்ப அலையானது 10 முதல் 20 நாட்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com