தேசத்துக்கும் சநாதன தர்மத்துக்கும் எதிரானது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

காங்கிரஸும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் தேசத்துக்கும் சநாதன தர்மத்துக்கும் எதிரானவர்கள்; அத்துடன் ஹிந்துக்களை பலவீனப்படுத்தும் செயல்களையே எப்போதும் அவர்கள் செய்து வருகிறார்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்மிருதி இரானி பேசியதாவது:

ஹிந்துத்துவத்தை எதிர்க்கும் காங்கிரஸôர் தற்போது பகவான் ராமரையும் எதிர்க்கின்றனர். அயோத்தியில் பாலராமர் சிலை திறப்பு விழாவுக்கு வருமாறு கொடுக்கப்பட்ட அழைப்பிதழை ஏற்காமல் விழாவைப் புறக்கணித்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா, காங்கிரஸ் கட்சியினர் சநாதன தர்மத்துக்கு எதிரானவர்கள் மட்டுமின்றி தேசத்துக்கும் எதிரானவர்கள்.

இவர்கள்தான் நாட்டைத் துண்டுகளாக்க வேண்டும் என்று பேசியவர்களைத் தங்கள் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர்.

சநாதன தர்மத்தையும் ஹிந்துக்களையும் பலவீனப்படுத்தும் செயலையே காங்கிரஸும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் செய்து வருகின்றனர்.

ராகுல் காந்தி குடும்பத்தினர் அமேதி தொகுதிக்கென்று எதுவும் செய்யவில்லை. இந்தத் தொகுதியில் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில்தான் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிட்டு ஸ்மிருதி இரானி தோற்கடித்தார்.

இந்தமுறை அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் பெயரை அக்கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. உத்தரபிரதேசத்தில் மே 20 ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்ட தேர்தலில் அமேதி தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com