ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்
படம் | ஏஎன்ஐ

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், அம்மாநில கூட்டுறவு வங்கியில் ரூ. 25,000 கோடி பணமோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாராமதி மக்களவை தொகுதியில் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார் அணி) சார்பில் போட்டியிடும் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து, அதே தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார் அணி) சார்பில் போட்டியிடுகிறார் ஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார்.

ரூ. 25,000 கோடி வங்கிப் பணமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், ’குற்றமற்றவர்’ என மகாராஷ்டிர காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு இன்று(ஏப். 24) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் பணமோசடி விடுவிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட தலைவர்களெல்லோரும் பாஜகவில் இணைந்த பின், குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு வருகிறார்கள் என சிவ சேனை(உத்தவ் தாக்கரே அணி) கட்சி விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com