வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

திரிபுராவில் வெப்ப அலை வீசி வருவதால் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

திரிபுராவில் வெப்ப அலை வீசி வருவதால் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு மாநிங்களில் அதிகப்படியான வெப்பஅலை வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திரிபுராவில் இன்று வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலையானது இந்த வார இறுதிக்குள் 39 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஏப்.27 வரை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் என்.சி.சர்மா தெரிவித்தார்.

மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில மக்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகம் அவசரநிலை மையங்கள் மற்றும் விரைவான மீட்புக் குழுக்களை செயல்படுத்தவும், அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com