மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

மணிப்பூரின், காங்போக்பி மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் பாலத்தின் ஒருபகுதி சேதமடைந்தது.

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தின் சபர்மெயினா மற்றும் கொப்ரு லேக் பகுதியில் நள்ளிரவு 12.45 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த வெடிகுண்டு வெடித்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பாலத்தின் இரு முனைகளிலும் மூன்று பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் காணப்பட்டன.

மணிப்பூரின் தலைநகர் அம்பாலை நாகாலாந்தின் திமாபூரை இணைக்கு மபாலத்தில் கனரக வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளளது. இதனால் அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குண்டு வெடித்த சில நிமிடங்களில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலத்தை சுற்றி வளைத்தனர், குண்டி வெடிப்பு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு சமூகங்கத்தினரிடையே துப்பாக்கிச் சண்டை நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்தாண்டு மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட இனக்கலவரத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com