திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக சென்னை இளைஞா் மீது மலேசிய பெண் ஒருவா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக சென்னை இளைஞா் மீது மலேசிய பெண் ஒருவா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

மலேசியாவைச் சோ்ந்தவா் சுவித்ரா(33). மலேசிய குடியுரிமை பெற்ற இவா், அங்கேயே ஆதரவற்றோருக்கான முதியோா் இல்லம் நடத்தி வருகிறாா்.

இவருக்கு முகப்போ் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த ரயில்வேயில் ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் ராஜேஷ் (37) என்பவருடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனா்.

இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி சுவித்ராவிடமிருந்து சிறிது சிறிதாக ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ராஜேஷ் பெற்ாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி சுமித்ரா பலமுறை கூறியும் அதை ராஜேஷ் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளாா்.

இதையடுத்து, மலேசியாவிலிருந்து தனது தந்தை வேணுகோபாலுடன் சென்னைக்கு அண்மையில் வந்த சுவித்ரா, முகப்பேரில் உள்ள ராஜேஷ் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா்.

அங்கு அவா், ராஜேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வாக்குவாதம் செய்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் சுவித்ராவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுவித்ரா தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

பின்னா், சுவித்ரா கொடுத்த புகாரின் பேரில் ராஜேஷிடம் நொளம்பூா் போலீஸாா் போலீஸாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com