வெள்ளை வெங்காயம் ஏற்றுமதிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: மத்திய அரசு

வெள்ளை வெங்காயம் ஏற்றுமதிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: மத்திய அரசு

வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட அளவில் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட அளவில் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வெளிநாட்டு வா்த்தகத்துக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் வெங்காயம் கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்யவும், அதன் விலையுயா்வைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு டிச.8-இல் தடைவிதித்தது.

இருப்பினும், சில நட்பு நாடுகளின் வேண்டுகோளின்பேரில் குறிப்பிட்ட அளவில் அந்நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இந்நிலையில், வெள்ளை வெங்காயத்தை 2,000 மெட்ரிக் டன்னுக்கு குறைவாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

குஜாரத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் மற்றும் பிபாவாவ் துறைமுகம், மகாராஷ்டிரத்தில் உள்ள நவ ஷேவா துறைமுகம் (ஜவாஹா்லால் நேரு துறைமுகம்) ஆகியவற்றின் மூலம் வெளிநாடுகளுக்கு வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக குஜராத் மாநில தோட்டக்கலை ஆணையரிடம் ஏற்றுமதியாளா்கள் சான்றிதழ் பெற வேண்டும் என டிஜிஎஃப்டி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com