ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

சத்தீஸ்கர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது குறித்து அமலாக்கத்துறை தகவல்

சத்தீஸ்கர் மதுபான ஊழல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் துடேஜாவை கைது செய்துள்ளதாக வியாழக்கிழமை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ராய்பூரைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 21 அன்று ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு துடேஜாவைக் காவலில் எடுத்தனர்.

இந்த வழக்கில் புதிய தகவல் அறிக்கையைப் பதிவு செய்த அமலாக்கத்துறையினர், துடேஜா மதுபான மோசடியில் முதன்மை நபராக செயல்பட்டதாக தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது டிஜிட்டல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ரூ.14.41 கோடி மதிப்புள்ள ரசீது கைப்பற்றப்பட்டுள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்ததாவது:

மாநில அரசின் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் மறைமுக நடவடிக்கைகள் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான அன்வர் தேபார் உடன் இணைந்து அனில் செயல்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநில சந்தைப்படுத்தல் வாரியத்தின் தலைவராக அருண்பதி திரிபாதியை நியமித்ததிலும் இவரது பங்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அவரும் இந்த வழக்கில் குற்றவாளியாக உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019 முதல் 2022 வரை பல்வேறு வகைகளில் நடைபெற்ற மோசடி குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகிறது.

மாநில அரசு சார்பில் வாங்கப்படும் மதுபானங்களுக்கு உற்பத்தியாளர்களிடம் இருந்து கமிஷன் பெறப்பட்டதாகவும் ஒரு ரூபாய் கூட நேரடியாக மாநில அரசின் கருவூலத்துக்கு செல்லவில்லை எனவும் வியாபார நடவடிக்கைகள் முழுதும் இந்த மறைமுக சிண்டிகேட்டால் நிர்வகிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

ரூ.2,100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாகவும் இதில் துடேஜாவுக்கு கணிசமான பணம் கிடைத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஏப்ரல் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட துடேஜவுக்கு 5 நாள்கள் விசாரணை காவலை நீதிமன்றம் விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com