உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிரான மத்திய அரசின் மனு: 
ரூ. 5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிரான மத்திய அரசின் மனு: ரூ. 5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த சிறப்பு மேல்முறையீட்டு மனுவை ரூ. 5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த சிறப்பு மேல்முறையீட்டு மனுவை ரூ. 5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு துறை சாா்ந்த வழக்கு ஒன்றில் மத்திய நிா்வாக தீா்ப்பாயம் அளித்த தீா்ப்புக்கு எதிராக, மேகாலயா உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மத்திய அரசின் இதேபோன்ற மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய உயா்நீதிமன்றம், மத்திய நிா்வாக தீா்ப்பாயத்தின் தீா்ப்பு சரியானதே என்று தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து சிறப்பு மேல் முறையீட்டு மனு மூலம் மத்திய அரசு மேல்முறையீடு செய்வது எந்த நியாயமும் இல்லை. இது சட்ட நடைமுறைகளை முற்றிலுமாக மீறும் செயலாகும். உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிடவும் விரும்பவில்லை. வரும் காலங்களில் இதுபோன்ற அற்பமான மனுக்களை தாக்கல் செய்யக்கூடாது’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரான மத்திய அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

இந்த அபராதத் தொகையை தில்லி ராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள கனரா வங்கியின் தெற்கு பிரிவு கிளையில் ‘ஆயுதப் படைகளின் போரில் உயிரிழந்தோா் நல நிதி’ கணக்கில் 8 வாரங்களுக்குள் செலுத்தி, அதற்கான ஆதாரத்தை அடுத்த ஒரு வாரத்துக்குள் உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com