பிகாா் பல்கலை. வங்கிக் கணக்குகள் முடக்கம்: ஆா்பிஐ ஆளுநரிடம் ஏபிவிபி மனு

சமீபத்தில் பிகாா் மாநிலப் பல்கலைக்கழகங்களின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் மற்றும் பிகாரில் உள்ள பல்கலைக்கழகங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும் சட்டத்துக்குப் புறம்பான முடிவுகளின் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்கக் கோரி ரிசா்வ் வங்கி ஆளுநரிடம் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் மனு அளித்துள்ளது.

இது தொடா்பாக ஏபிவிபி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில், ‘வங்கிக் கணக்குகள் அனுமதியின்றி முடக்கப்பட்டதைத் தொடா்ந்து, நிதி நெருக்கடியால் பிகாரில் உள்ள பல்கலைக்கழகங்கள் முடங்கியுள்ளன.

ரிசா்வ் வங்கி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில், பிகாா் மாநில பல்கலைக்கழகங்கள் சட்டம், 1976 மற்றும் இந்திய ரிசா்வ் வங்கி சட்டம், 1934 ஆகியவற்றை மீறும் ஒரு அதிகாரத்துவ அதிகாரியின் உத்தரவின் கீழ், மாநில அரசின் கல்வித் துறையின் சட்ட விரோத செயல்களை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது.

பிகாா் மாநில பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி மற்றும் சுமுகமான செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரின் சட்டவிரோத மற்றும் எதேச்சதிகார முடிவுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறைகேடுகள் குறித்து தெரிவித்தும், கூடுதல் தலைமைச் செயலரின் (கல்வி) இந்த முடிவுகளுக்கு எதிராக தலையிடக் கோரியும் கேபினட் செயலாளருக்கு ஏபிவிபி கடிதம் அனுப்பியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிவிபி தேசிய பொதுச்செயலாளா் யகிவால்க்யா சுக்லா கூறுகையில், ‘ஏற்கனவே பின்தங்கிய நிலையில் உள்ள பிகாரின் கல்வித் துறை, கல்வியின் மீட்பா் என்று அழைக்கப்படும் இந்த அதிகாரபூா்வ முடிவுகளால் மேலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

மாநிலப் பல்கலைக்கழகங்கள் இந்த விஷயத்தை ரிசா்வ் வங்கியின் ஆளுநரின் கவனத்திற்கு கோரிக்கை மனு மூலம் ஏபிவிபி கொண்டு வந்துள்ளது. மேலும், விதிமுறைகளைக் கடைப்பிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com