மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி பரப்பிய நான்கு பேர் மீது கேரளா சைபர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து கேரளா மாநிலம் எர்னாகுளம் நகர சைபர் போலீஸார், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து முகநூலில் வதந்தி பரப்பிய அனில் ஜி. ஜார்ஜ், சனு ஹனிஃப், சிவி.ஏ. குட்டி மற்றும் ஸிகாப் அலி என்ற நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு விழுவதாகவும், இதுபோன்ற மாற்றியமைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களே மணிப்பூர் தேர்தலில் பயன்படுத்தப்படுவதாகவும், மேலும் பாஜக குறித்த அவதூறு செய்திகளையும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்துள்ளனர்.

இவ்வாறு பரப்பப்படும் போலிச் செய்திகளால் வாக்களிக்கச் செல்வோருக்கு வாக்களிப்பது குறித்த நம்பிக்கையின்மை உருவாகும். எனவே, கலவரத்தைத் தூண்டும் விதமாக செயல்பட்டதாக நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரளா சைபர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சைபர் டோம் (Cyber dome) என்ற பிரிவின் மூலம் சமூக வலைத்தளங்களில் பரவும் போலிச் செய்திகளை தடுத்து வருகின்றனர்.

கடந்த வாரமும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி பரப்பிய ஐந்து நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com