2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

ம.பி. தேர்தலில் மதியம் 1 மணிக்கு 38.96% வாக்குப் பதிவு
2-ம் கட்ட வாக்குப் பதிவில் வாக்களித்த மத்திய பிரதேச துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்
2-ம் கட்ட வாக்குப் பதிவில் வாக்களித்த மத்திய பிரதேச துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்ANI

மத்திய பிரதேச மாநிலத்தில் 38.96 சதவிகித வாக்குப் பதிவு பிற்பகல் 1 மணி வரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஆறு தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஹோஷாங்காபாத் 45.71 சதவீதமும், தமோஹ் 37.57, கஜுராஹோ 37.89, ரேவா 24.46, சத்னா 40.83 மற்றும் திகம்கர் 40.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக மாநில தேர்தல் ஆணையர் அனுபம் ராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காலை 9 மணி நிலவரப்படி 13.82 சதவிகித வாக்குகளும் 11 மணி நிலவரப்படி 28.15 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்தன.

2019 பொதுத் தேர்தலை ஒப்பிடும்போது பிற்பகல் 1 மணி நேரம் வரையிலான வாக்குப்பதிவு சதவிகிதம் ஏறத்தாழ ஒரே போல இருப்பதாக தேர்தல் ஆணையர் குறிப்பிட்டார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளுக்காக மக்களவைத் தேர்தல் முதல் கட்டம் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. அடுத்த இரண்டு கட்டங்கள் மே 7 மற்றும் மே 13 நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com