ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

ராஞ்சியில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Mother-son duo killed in road accident in Odisha
Mother-son duo killed in road accident in Odisha

ராஞ்சியில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 30 மாணவர்களுடன் சென்ற பேருந்து, மந்தாரில் உள்ள செயின்ட் மரியா பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு திருப்பத்தில் விபத்துக்குள்ளானது.

அந்தப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 15 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மிஷன் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளதாக மந்தர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் ராகுல் தெரிவித்தார்.

மாணவர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது, சிடி ஸ்கேன் செய்யப்படுகிறது. மற்றபடி அனைத்து மாணவர்களும் நலமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com