உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிக்கப்படும் காட்சி
ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிக்கப்படும் காட்சிபடம் | பிடிஐ

இமயமலை அடிவாரப் பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலையோர வனப்பகுதிகளில் கடந்த 60 மணி நேரத்துக்கும் மேலாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிகையில் செல்லும் கோடை வாசஸ்தலமான நைனிட்டால் மாவட்டத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி, நைனிட்டால் ஏரியில் சுற்றுலா பயணிகள், படகுப் போக்குவரத்துக்கு மேற்கொள்ள விதிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயில் 108 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு மரங்கள், செடிகள் தீயில் கருகி வருவதால் இயற்கை வளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் போர்க்கால அடிப்படியில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீம்தால் ஏரியிலிருந்து நீரை எடுத்து, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பைன்ஸ், பூமிதாஹார், ஜியோலிகோட், நாராயண் நகர், பவாலி, ராம்கர் மற்றும் முக்தேஷ்வர் ஆகிய பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ விரைவில் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்ப்பார்ப்பதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். காட்டுத் தீயை அணைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகமும், தீயணைப்புத்துறையினரும், உள்ளூர் மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com