மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

முன்னதாக ஹேமந்த் சோரனின் மாமா, ராஜா ராம் சோரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள13 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அவரது கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ராஜா ராம் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஷிபு சோரனின் மூத்த சகோதரர் ஆவார்.

நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது.

முன்னதாக, அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவரது கட்சியின் மூத்த தலைவா் சம்பய் சோரன் ஜாா்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்றாா். முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவா் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்திய உயா்நீதிமன்றம், தீா்ப்பை ஒத்திவைத்தது. இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் இதுவரை தீா்ப்பை வழங்காததைத் தொடா்ந்து, ஹேமந்த் சோரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் முறையிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com