ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

மம்தா பானர்ஜி ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

துர்காபூர் பகுதியில் ஹெரிகாப்டரில் ஏறும்போது நகரக்கூடிய படிக்கட்டுகளில் மம்தா நடந்து சென்றபோது கால் தவறி விழுந்துள்ளார். இதில் இவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் வந்து அவருக்கு முதலுதவி செய்தனர்.

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!
மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அசன்சோலுக்குச் செல்வதற்குத் திட்டமிட்ட நிலையில் துர்காபூரில் ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தவறிவிழுந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஹெலிகாப்டருக்குள் மம்தா தவறி விழுந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com