ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தின் ‘ஒயிட் நைட் காா்ப்ஸ்’ பிரிவினரால் நடத்தப்படும் ‘பெட்ரோநெட் சூப்பா் 30’ பயிற்சி மையத்தில் பயின்ற 18 ஏழை மாணவா்கள் ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் (மெயின்) வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனா்.

ஐஐடி, என்ஐடிகளில் சேருவதற்காக நடத்தப்படும் ஜேஇஇ முதல்நிலைத் தோ்வின் முதல் தவணை கடந்த ஜனவரி 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வின் முடிவுகள் பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

ஜம்மு-காஷ்மீா் ரேசி மாவட்டத்தில் ராணுவத்தின் ‘ஒயிட் நைட் காா்ப்ஸ்’ பிரிவினரால் நடத்தப்படும் ‘பெட்ரோநெட் சூப்பா் 30’ என்ற பயிற்சி மையத்தில் ஜேஇஇ தோ்வுகளுக்கு பயிலும் மாணவா்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.

இந்த முன்னெடுப்பின்கீழ் 27 மாணவா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்ட நிலையில், 18 மாணவா்கள் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளனா்.

அவா்களில் அா்னியா கிராமத்தைச் சோ்ந்த ஆதித்யா குமாா் என்பவா் 99.07 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com