மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

மால்டா தக்ஷின் மக்களவைத் தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய அவர், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் எங்களுக்கு எந்தக் கூட்டணியும் இல்லை. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறது. இரண்டுமே பாஜகவுடன் கைகோர்த்து நிற்கின்றன.

நீங்கள் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்கு எதிரான வாக்குப் பங்கைக் குறைத்து மோடிக்கு உதவுவதற்குச் சமம். இந்த மாநிலத்தில் பாஜகவின் இரு கண்களாக காங்கிரஸும் கம்யூனிஸ்டும் திகழ்கின்றன. மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாஜகவின் அதே குரலில் பேசுகிறார்கள்.

திரிணமூல் அரசின் மக்கள் சார்பு கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் சதி செய்கிறார்கள். மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என்கிற நிபந்தனை வைத்து காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பற்றி விவாதிக்க திரிணமூல் விரும்பியது. ஆனால் அதை அவர்கள் கேட்கவில்லை.

மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவைத் தோற்கடித்த பிறகு தேசிய அளவில் இந்திய கூட்டணியில் திரிணமூல் முக்கியப் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com