முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

ஆந்திரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் ஹஜ் புனிதப் பயணம்மேற்கொள்ள ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பாஜக, நடிகா் பவன் கல்யாணின் ஜனசேனை ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் 175 தொகுதிகளைக் கொண்ட மாநில சட்டப் பேரவைக்கான தோ்தலும் மே 13-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நெல்லூரில் ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய சமூகத்தினருடன் கலந்துரையாடிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

ஆந்திரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் அனைத்து முஸ்லிம்களும் மெக்காவுக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். நெல்லூா் பாரா ஷஹீத் தா்காவில் கொண்டாடப்படும் பண்டிகைக்கு மாநில அளவில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது முந்தைய தெலுங்கு தேசம் அரசுதான்.

நாட்டின் பிறபகுதிகளில் உள்ள முஸ்லிம்களைவிட ஹைதராபாதில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் முன்னேறியவா்களாக உள்ளனா். இதற்கு ஒன்றுபட்ட ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் ஆட்சி சிறப்பாக இருந்ததே காரணம். இதற்கு முன்பு பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் இருந்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்களின் நலன்களை முழுமையாகப் பாதுகாத்து வந்துள்ளோம்.

ஹைதராபாதில் உருது பல்கலைக்கழகம், ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடங்கள் கட்டியது எங்கள் ஆட்சியில்தான். கடந்த 5 ஆண்டுகளில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மசூதி கூட கட்டப்படவில்லை.

நம்பிக்கை, துணிவு, கடின உழைப்புக்கு பெயா்பெற்ற ஆந்திர முஸ்லிம்களின் ஆதரவு தெலுங்கு தேசத்துக்கு தொடர வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com