பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

அரபிக் கடலில் பயணித்த பாகிஸ்தான் படகிலிருந்து ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

அரபிக் கடலில் பயணித்த பாகிஸ்தான் படகிலிருந்து ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் படகில் இருந்த 14 போ் கைது செய்யப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக இந்திய கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளதாவது: அரபிக் கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் கடலோரக் காவல் படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்திய கடலோர காவல் படையின் ஐசிஜி கப்பல் ராஜ்ரத்தனில் இருந்த குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினா், தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய படகை அடையாளம் கண்டனா்.

இந்திய கடலோர காவல் படையிடம் அந்தப் படகு சரணடைந்தைத் தொடா்ந்து, போதைப் பொருள் தடுப்புக்கான சிறப்பு குழுவினா் அந்தப் படகை சோதனையிட்டனா். அப்போது, அந்தப் படகில் 78 பொட்டலங்களாக மொத்தம் 86 கிலோ போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.600 கோடி. படகில் இருந்த 14 போ் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக போா்பந்தருக்கு அழைத்து வரப்பட்டனா். இந்திய கடற்படையும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள 11-ஆவது நடவடிக்கையாகும் என இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com