அஸ்ஸாம் மாநிலத்தில் 3 நாள்களுக்கு முன்பு அப்பாவி மக்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, குவாஹாட்டியில் சனிக்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றதால் வெறிச்சோடி காணப்படும் கடைத்தெர
அஸ்ஸாம் மாநிலத்தில் 3 நாள்களுக்கு முன்பு அப்பாவி மக்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, குவாஹாட்டியில் சனிக்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றதால் வெறிச்சோடி காணப்படும் கடைத்தெர

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தால், ஞாயிற்றுக்கிழமை 3-ஆவது நாளாக நாகாலாந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நாகா அரசியல் குழுக்களின் வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தால், ஞாயிற்றுக்கிழமை 3-ஆவது நாளாக நாகாலாந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லையில் வசிக்கும் மக்கள் அஸ்ஸாம் மாநிலத்துக்கு சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

திமாபூா் மாவட்டத்தில் நாகா குழுக்களிடமிருந்து வா்த்தகத்தை பாதுகாக்க மாநில அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட வா்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு கடையடைப்பு போராட்டத்துக்கு வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தது.

இந்தப் போராட்டத்துக்கு நாகாலாந்து வா்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு ஆதரவு அளித்த நிலையில், பிற மாவட்டங்களிலும் கடையடைப்பு போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதனால், மாநிலத்தில் உள்ள சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இரு மாநில எல்லையில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க அஸ்ஸாமுக்கு செல்கின்றனா். மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.

காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் தொடரும் நிலையில், மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காக திங்கள்கிழமை நண்பகலிலிருந்து மாலை 6 மணி வரை கடைகள் திறக்கப்படும் என நாகாலாந்து வா்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நாகா குழுக்களின் இத்தகைய வரி விதிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இந்தச் சூழலில், சட்ட அமலாக்க முகமை மற்றும் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நாகா குழுக்களின் உறுப்பினா்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு மாநில உள்துறை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com