கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

திகார் சிறையில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கிறதா என்று விசாரித்த கேஜரிவால்...
Sunita
Sunita

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி மற்றும் கேபினட் அமைச்சர் அதிஷி ஆகியோர் திகார் சிறையில் தில்லி முதல்வர் கேஜரிவாலை சந்தித்து பேசினர்.

முன்னதாக சுனிதாவுக்கு கணவரைச் சந்திப்பதற்கான விண்ணப்பம் திகார் சிறை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. பின்னர், திங்கள்கிழமை சந்திப்பிற்கு அனுமதி வழங்கியதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுடன் அதிஷி பேசினார். கேஜரிவாலின் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, கேஜ்ரிவால் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கிறதா என்றும், மொஹல்லா கிளினிக்குகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டார்.

ஞாயிற்றுக்கிழமை, முதல்வரைச் சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கூறியது, இந்த குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை கேஜரிவாலை சந்திக்கிறார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com