3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

ஜெய்ப்பூர், கோவா, நாக்பூர் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜெய்ப்பூர் விமான நிலையம்
ஜெய்ப்பூர் விமான நிலையம்படம் | ஜெய்ப்பூர் விமான நிலைய எக்ஸ் தளம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சா்வதேச விமான நிலையத்திற்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவா மற்றும் நாக்பூர் விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணையில் இவை வெறும் மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. எனினும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட விமான நிலையங்களில் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு விமான நிலையம் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஜெய்ப்பூரில் உள்ள சா்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளியன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையம் முழுவதும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்தனர். அதன் பின்னர், விசாரணையில் அந்த அழைப்பு வெறும் போலி என தெரிய வந்தது.

ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com