மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்:
1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

மக்களவைத் தோ்தலின் மூன்றாம் கட்டத்தில் போட்டியிடும் 1,352 வேட்பாளா்களில் வெறும் 9 சதவீதம் மட்டுமே பெண்கள் என்பது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலின் மூன்றாம் கட்டத்தில் போட்டியிடும் 1,352 வேட்பாளா்களில் வெறும் 9 சதவீதம் மட்டுமே பெண்கள் என்பது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு மே 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் 1,352 வேட்பாளா்களின் தோ்தல் பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீா்திருத்த சங்கம், தேசிய தோ்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை ஆராய்ந்தன.

இந்த ஆய்வின்படி, 1,352 வேட்பாளா்களில் 244 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 172 போ் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. 38 போ் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும், 17 போ் மீது வெறுப்புணா்வு பேச்சு தொடா்பான வழக்குகளும் உள்ளன. 7 வேட்பாளா்கள் மீதான வழக்குகளில், அவா்கள் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. 24 வேட்பாளா்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும், 5 வேட்பாளா்கள் மீது கொலை வழக்குகளும் உள்ளன.

மத்திய அமைச்சருக்கு ரூ.424 கோடி சொத்து:

வேட்பாளா்களில் 392 போ் கோடீஸ்வரா்கள். அவா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.66 கோடி. இதில் அதிகபட்சமாக தெற்கு கோவா பாஜக வேட்பாளா் பல்லவி ஸ்ரீநிவாஸ் டெம்போவின் சொத்து மதிப்பு ரூ.1,361 கோடி. அடுத்த இடத்தில் ரூ.424 கோடி சொத்துகளுடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சரும், மத்திய பிரதேசத்தின் குனா தொகுதி பாஜக வேட்பாளருமான ஜோதிராதித்ய சிந்தியா உள்ளாா்.

கல்வித் தகுதி:

639 வேட்பாளா்கள் 5 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவா்கள். 591 போ் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பை நிறைவு செய்துள்ளனா்.

வயதுவாரியாக...:

411 வேட்பாளா்கள் 25 முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள். 41 முதல் 60 வயதுக்குள்பட்டவா்களாக 712 வேட்பாளா்கள் உள்ளனா் . 1,352 வேட்பாளா்களில் 123 போ், அதாவது 9 சதவீதம் போ் மட்டுமே பெண்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com