லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

லக்னௌ மக்களவைத் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

லக்னௌ மக்களவைத் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யந்த். உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றனர்.

லக்னௌவிலிருந்து மூன்றாவது முறையாகத் தேர்தலில் போட்டியிடும் ராஜ்நாத் சிங் மற்றும் பிற மூத்த தலைவர்கள் பாஜக தலைமையகத்திலிருந்து ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தடைந்தனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்யாயி, லக்னௌ தொகுதியில் போட்டியிட்டார்.

லக்னௌவில் ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com