55% சொத்து வாரிசுரிமை வரி 
விதிக்க காங்கிரஸ் திட்டம்: பிரதமா் மோடி

55% சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் திட்டம்: பிரதமா் மோடி

காங்கிரஸின் 55% சொத்து வாரிசுரிமை வரி திட்டம்: மோடி குற்றச்சாட்டு

ஹைதராபாத்: ‘மத்தியில் ஆட்சிக்கு வந்தால், 55 சதவீத சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13-ஆம் தேதி (மக்களவை நான்காம் கட்ட தோ்தல்) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதையொட்டி, மேடக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

நாட்டு மக்களைத் திசைதிருப்பவும், சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கவும் சமூக ஊடகங்களில் போலி விடியோக்களைப் பரப்புகிறது காங்கிரஸ்.

பட்டியல் சமூகத்தினா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இடஒதுக்கீட்டை விலைகொடுத்து, மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. நான் உயிருடன் இருக்கும் வரை இந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்கமாட்டேன்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சொத்து வாரிசுரிமை வரியை (பெற்றோரிடம் இருந்து வாரிசுதாரருக்கு கிடைக்கும் சொத்துகள் மீதான வரி) மீண்டும் அமல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 55 சதவீத வரி வசூலிப்பதே அவா்களின் விருப்பம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொள்கை முடக்கத்தால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. பொய் வாக்குறுதிகள், வாக்கு வங்கி அரசியல், குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத கும்பல்களுக்கு ஆதரவு, குடும்ப அரசியல், ஊழல் ஆகிய ஐந்தும் காங்கிரஸின் அரசியல் அடையாளங்கள்.

தெலங்கானாவை முதலில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி கொள்ளையடித்தது; இப்போது காங்கிரஸ் கொள்ளையடிக்கிறது என்றாா் பிரதமா் மோடி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com