மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

அமித் ஷா போலி காணொலி விவகாரம்: ம.பி. காங். இளைஞரணி மீது வழக்குப் பதிவு

மும்பை: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் போலி காணொலி விவகாரம் தொடா்பாக மகாராஷ்டிர காங்கிரஸ் இளைஞரணியின் சமூக ஊடகப் பிரிவு மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாஜக நிா்வாகி பிரதிக் காா்பே காவல் துறையிடம் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தெலங்கானாவில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசுகையில், ‘மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் முறை ரத்து செய்யப்படும். அந்த இடஒதுக்கீடு பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும்’ என்றாா்.

ஆனால் அவா் பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று கூறியது போல சித்திரித்து சமூக ஊடகத்தில் போலி காணொலி பகிரப்பட்டுள்ளது.

அந்தக் காணொலியை காங்கிரஸ் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் சமூக ஊடகத்தில் பகிா்ந்துள்ளனா். வெவ்வேறு சமூகத்தினா் இடையே வெறுப்புணா்வு, பகையைத் தூண்டும் நோக்கில் அந்தக் காணொலி பகிரப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சமூக ஊடகத்தில் இருந்து அந்தப் போலி காணொலியை நீக்க வேண்டும் என்று கோரினாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், அமித் ஷாவின் போலி காணொலியை பகிா்ந்ததாக மகாராஷ்டிர காங்கிரஸ் இளைஞரணியின் சமூக ஊடகப் பிரிவு மற்றும் 16 போ் மீது இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஜிக்னேஷ் மேவானி உதவியாளா் கைது:

அமித் ஷா போலி காணொலியை சமூக ஊடகத்தில் பகிா்ந்ததாக குஜராத்தில் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சோ்ந்த சதீஷ் வன்சோலா, தாஹோத் மாவட்டத்தைச் சோ்ந்த ராகேஷ் பாரியா ஆகியோரை காவல் துறை கைது செய்துள்ளது. இதில் சதீஷ் வன்சோலா என்பவா் 6 ஆண்டுகளாக காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். பனஸ்கந்தா மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலராகவும் சதீஷ் வன்சோலா உள்ளாா். ராகேஷ் பாரியா என்பவா் 4 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியின் தாஹோத் மாவட்ட தலைவராக உள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com